நடமாடும் மருத்துவ வாகன சேவை தொடக்கம்..!
கிராமப்புற மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்குவதற்காக நடமாடும் மருத்துவ வாகனத்தை மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மயிலாப்பூரில் இசிஜி எக்கோ உள்ளிட்ட வசதிகளுடன் பொது மருத்துவம் நீரிழிவியல், இருதயவியல் மருந்து சேவைகள் வழங்கும் இந்த மருத்துவ வாகனம் மயிலாப்பூரில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனை உதவியுடன் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மருத்துவ வாகன தொடக்க நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





