நகரும் படிக்கட்டுகள் நடக்கும் படிக்கட்டுகளாக மாறிய அவலம்..!
தாம்பரம் பேருந்து நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் நடக்கும் படிக்கட்டுகளாக மாறி உள்ளதாக பயணிகள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் எஸ்கலேட்டர்கள், நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் செயலிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நகரும் படிக்கட்டுகள் நடக்கும் படிக்கட்டுகளாக மாறியுள்ளதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு முறையான பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





