காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தர மனைவி கோரிக்கை..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 நாட்களுக்கு முன்பாக காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி பெண் ஒருவர் வீடியோ மூலமாக கண்ணீர் மல்க போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுத்திருக்கார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த விக்னேஷ் பெங்களூரு மானியத்தா டெக் பார்க் இல் உள்ள நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியில் சென்ற அவர் தற்பொழுது வரை காணவில்லை. போன் சுவிட்ச் ஆஃப் ஆக உள்ளதால் பயமாக உள்ளது என்றும் இது குறித்து போலீசாரிடம் கூறியும் அலட்சியம் காட்டுவதாகவும் மனைவி புகார் தெரிவித்திருக்கார் .
📱 Share on WhatsApp 𝕏 Share on X





