--- --:--:-- --

வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு..!

1

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தம் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்ப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டு இறுதி போட்டி வரை முன்னேறினார்.

 

இறுதிப்போட்டி தொடங்கும் முன்பு அவரது எடை 100 கிராம் அதிகம் காணப்பட்டதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உடைந்து போன வினேஷ் போகத் உரிய எடையுடன் இறுதிப் போட்டி வரை சென்ற தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வினேஷ் போகத் தரப்பில் காணொளி வாயிலாக இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, விதுஷ்பத் சிங்கானியா ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் விசாரணை நிறைவுற்று தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon