திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்து, தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சேரன்.
இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது. இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிசம், முரண், யுத்தம் செய் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.இந்த நிலையில், இயக்குநர் சேரன் கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
இயக்குநர் சேரன் வண்டிக்கு பின்னால் இருந்த ஒரு தனியார் பேருந்து தொடர்ந்து ஹாரன் அடித்ததால் ஆவேசம் அடைந்து காரில் இருந்து இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் சேரன்.
மேலும் செய்திகள் :
ரூ.250 கோடியை தாண்டிய விஜய் சம்பளம்..!
புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் நடிகை தர்ஷனா?
திடீரென நீ நான் காதல் சீரியலில் இருந்து விலகியது ஏன்?
விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா! உருக்கமாக போட்ட பதிவு..!
சின்னத்திரையில் மீண்டும் நடிக்கமாட்டேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை பிரியங்கா..!
'கோட்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது..!