--- --:--:-- --

சாலையில் சிதறிய எரிவாயு சிலிண்டர்கள்..!

4

செங்கல்பட்டு மாவட்ட சிங்கப்பெருமாள் கோயில் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த வேன் விபத்திற்கு உள்ளானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கப்பெருமாள் கோயில் அருகே திருச்சியை சேர்ந்த தேசிய அளவில் சென்ற சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோவின் டயர் வெடித்ததால் விபத்திற்கு உள்ளானது.

 

சிலிண்டர்கள் சாலையில் சிதறின. தகவலறிந்து வந்த தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்கள் உதவியோடு சாலையில் இருந்து அகற்றினர்.

 

மேலும் விபத்தில் காயமடைந்த ஓட்டுனரின் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon