--- --:--:-- --

கணினியின் பேட்டரி வெடித்து தீ பற்றி விபத்து..!

3

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் வந்த நிலையில் சங்க செயலாளர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

அலுவலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண்கள் மத்திய சாப்பாட்டிற்காக வெளியே சென்று இருந்த நிலையில் சங்க செயலாளர் ஸ்ரீதரன் மற்றும் உள்ளே இருந்த பொழுது பயங்கர சத்தத்துடன் கணினியின் பேட்டரி வெடித்து தீ பற்றியதாக கூறப்படுகிறது.

 

தீப்பிடித்தது குறித்து ஸ்ரீதரன் தனது மனைவியை தொலைபேசியை தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் சோதனை நடத்தி வங்கியில் ஒரு பாட்டிலில் இருந்த பெட்ரோலையும் அதன் அருகில் இருந்த தீப்பெட்டியையும் கைப்பற்றினர்.

 

ஆடிட்டிங் செய்ய வங்கி அதிகாரிகள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடந்ததால் ஸ்ரீதரன் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon