நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை தாக்குவதற்கு ஆயுதத்தை எடுத்து வந்ததாக தங்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக மூன்று மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
தங்களது பையில் இருந்து கத்தி, கத்திரிக்கோல் போன்ற எந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்து தங்கள் பையில் வைத்துதாக காவல்துறையிடம் கொடுத்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.