ராயன் படம் பார்க்க சென்ற பொழுது ஏற்பட்ட தகராறில் கொலை..!

சென்னையில் இளைஞரை கொலை செய்து விட்டதாக கூறி இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சரணடைந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்த இம்ரான் மற்றும் முகமது என்பதும் கொலையானவர் சிராஜ் என்பதும் தெரியவந்தது.

 

மேம்பாலம் அருகே உடலுறுப்புகள் சிதைக்கப்பட்டு கிடந்த சிராஜின் சடலத்தை போலீசார் மீட்டனர். தொடர் விசாரணையில் தியேட்டரில் ராயன் படம் பார்க்கும் பொழுது முன்னாள் அமர்ந்த சிராஜ் மீது பின்னால் அமர்ந்திருந்த இம்ரான் முகமது கலீலின் கால் பட்டதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து சமாதானம் பேசலாம் என சிராஜ் அழைத்து வந்து மது அருந்திய பொழுது இம்ரானின் தாயார் குறித்து அவதூறு பேசியதாகவும் இதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.