மீனவர்களின் வளையல் சிக்கிய கடல்பசு..உயிருடன் பத்திரமாக மீட்ட மீனவர்..!

றந்தாங்கி அருகே மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கடல் பசு பத்திரமாக கடலில் விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு புதுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. நாட்டு படகில் மீனவர் வலையில் அரிய வகை உயிரினமான கடற்பசு சிக்கியது.

 

இதனை பார்த்த கருப்பையா வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அருகில் இருந்த சக மீனவர்களின் உதவியுடன் கடற்பசுவை மீட்டு பத்திரமாக மீட்டார். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் மீனவர்களின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.