தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறியப்படுவதாக உளவு நலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தர்மபுரி ஊரக நலத்துறை இணை இயக்குனர் சாந்தி திடீர் சோதனை நடத்திய பொழுது கருவின் பாலினத்தை கண்டறிந்து கொண்டிருந்த தனியார் மருத்துவமனை செவிலியர் சார்பாக மற்றும் இடைத்தரகர் பிடிபட்டனர். பாலினத்தை கண்டறிய வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.