குடும்பத்தினருடன் மூதாட்டி தர்ணா..!

நிலப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய மூதாட்டி குடும்பத்தினருக்கும் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

சேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த 70 வயதான பச்சையம்மாளின் வீட்டை ஒட்டிய பகுதியை ஆக்கிரமித்த நபர் அங்கே கஞ்சா மதுபோதையுடன் இருந்தால் அச்சம் ஏற்படுவதாக மூதாட்டி உறவினர்கள் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கும் படி நீதிமன்றம் அளித்த உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.