--- --:--:-- --

விளம்பர பலகை விழுந்து தம்பதி காயம்..!

8

ரூரில் பழுதடைந்த மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து செல்போன் கடை விளம்பர பலகை சாலையில் சென்ற தம்பதியர் மீது விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தார். கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு எதிரில் அப்துல் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் செல்போன் கடையின் விளம்பரப் பலகை அமைந்துள்ளது.

 

இந்த நிலையில் சுவர் சேதமடைந்து விளம்பர பலகை மற்றும் கட்டிடத்தின் பழுதடைந்த ஒரு பக்க கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அப்பொழுது அந்த கட்டிடத்தில் முன்பு நின்று கொண்டிருந்த தம்பதியர் மீது விளம்பர பலகை உள்ளது. இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

 

இதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், கட்டிடத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து கட்டிடத்தில் உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon