கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி சரமாரியாக தாக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் எருமனூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து புகைப்படத்தில் இருந்த மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியில் 2k கிட்ஸ் சரமாரியாக தாக்கி இழுத்துச் சென்றனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் விரைந்து அவரை மீட்டு உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்களும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பெலிக்ஸ் உடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அவரை போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.