கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து..!
வயநாடு நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் மாநில அளவிலான ஓணம் கொண்டாட்டங்களை கேரளா அரசு ரத்து செய்துள்ளது. மலையாளம் மொழி பேசும் மக்களின் பிரதான பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்படும்.
ஆனால் இந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் வீடு, உணவுகள் உடைமைகளை இழந்து மீள முடியாத துயரத்தில் உள்ளனர். அவர்களின் நிலையை கருத்தில் கொண்டும் அவர்களது துக்கத்தில் பங்கேற்கும் விதமாகவும் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
அதேசமயம் மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓன பண்டிகையை கொண்டாடுமாறு கூறியுள்ளது. ஓணம் கொண்டாட்டங்களை தவிர்த்து வயநாட்டு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டுமாறு கேரளா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





