பஸ்ஸில் கஞ்சா போதையில் பள்ளி மாணவர்கள் செய்த செயல்..!

திருத்தணியில் அரசு பேருந்தில் பயணிக்கும் பொழுது அரசு பள்ளி மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளது.

 

பள்ளி முடிந்து வரும் மாணவர்கள் கஞ்சா மற்றும் மதுபோதையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ரகளையில் ஈடுபடுவதாகவும் இதனை தட்டிக் கேட்கும் பெண் பயணிகளை தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

 

இது குறித்த தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தப்பிச் சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.