--- --:--:-- --

பெண் மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை..!

5

விருத்தாச்சலத்தில் அனுமதி இன்றி ஸ்கேன் கேம்பை திறந்த பெண் மருத்துவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விருத்தாச்சலத்தில் தனியார் மருத்துவமனையில் கருவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து கூறுவதாக 2016 ஆம் ஆண்டு புகார் அளித்தது குறித்து விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை குழுவினர் ஆய்வு செய்தனர்.

 

பாலினத்தை கண்டறிந்து கூறுவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அனுமதி இல்லாமல் ஸ்கேன் செய்தது குறித்தும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த விருத்தாச்சலம் குற்றவியல் நீதிமன்றம் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் கோப்பெருந்தேவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

 

பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெண் மருத்துவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்றவர்கள் மீது பெண் மருத்துவரின் கணவர் தாக்குதல் நடத்தி அத்துமீறலில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon