திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்..ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த மக்கள்..!
திருச்செந்தூரில் ஆடி அமாவாசையான நேற்று திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது.
இதனால் கடலில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்த நிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் அதில் அமர்ந்து செல்பி எடுத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





