புதிதாக விண்ணப்பித்தோருக்கு விரைவில் ரேஷன் அட்டை..!
புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி இந்த மாதம் முதல் தொடங்கப்படும் என கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதிதாக ரேஷன் கார்டு கேட்டு இதுவரை 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அனைத்துவித பரிசீலனையும் முடிந்ததால் விரைவில் புதிய அட்டை வழங்கப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் 3.63 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




