ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் வாழ்த்து..!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்றார்.

 

அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.