--- --:--:-- --

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..!

2

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அம்மாபேட்டைசென்னம்பட்டி திருமகள் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை வடக்கு ஒன்றியம் சென்னம்பட்டி திருமகள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

 

மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இந்த சிறப்பு வாய்ந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார்.

முன்னதாக எரிசக்தித்துறை, மின்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கால்நடை பராமரிப்பு துறை வருவாய்த்துறை, வீட்டுவசதித்துறை, காவல்துறை, காவல்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டார்.

 

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகள் துறை உதவி இயக்குநர் உமாசங்கர், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, அந்தியூர் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் KS.சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாமணி மற்றும்
அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon