--- --:--:-- --

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பாஜக மாஜி நிர்வாகி அஞ்சலை கைது..!

8

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அஞ்சலை சென்னையில் கைது செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களை திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த புளியந்தோப்பு அஞ்சலை நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கொலையாளிகளுக்கு பண உதவி செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த அஞ்சலையை சென்னை ஓட்டேரியில் போலீசார் கைது செய்தனர்.

 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலைக்கு தொடர்பு இருப்பதை தொடர்ந்து பாஜக அவரை கட்சியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி எல்லப்பன் என்றவனையும் போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon