--- --:--:-- --

கோலாகலமாக நடந்த ஆனந்த் அம்பானியின் திருமணம்..!

8

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்டின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்திய பிரபலங்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 

திருமண கொண்டாட்டங்கள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் ஜூலை 12 சுப விவா என்றழைக்கப்படும் திருமண விழாவுடன் தொடங்கியது.

 

இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நாளாக இருக்கும். இந்த விழாவிலும் இந்திய பாரம்பரிய ஆடையுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

 

ஒட்டு மொத்த இந்திய பிரபலங்கள் அனைவரும் மும்பையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக குவிந்துள்ளனர். இந்நிலையில் உலகமே வியக்கும் வகையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டின் திருமணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இந்திய பிரபலங்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

 

ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்திற்கான அனைத்து நிகழ்ச்சிகளும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும். முக்கிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் பாரம்பரிய வேத இந்து சடங்குகளின்படி நடைபெறும்.

 

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் உலக வணிகத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon