--- --:--:-- --

இன்டர்வியூவில் அதிர்ச்சி..வேலைக்காக முண்டியடித்துக் கொண்ட இளைஞர்கள்..!

6

குஜராத் தொழில் தனியார் நிறுவன வேலைக்கான நேர்காணலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலத்தில் உள்ள தெர்மாக்ஸ் என்ற நிறுவனத்தில் 10 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

இதை அறிந்த இளைஞர்கள் பலர் அந்த நிறுவன வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த பணியிடங்களுக்காக கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூடியுள்ளனர். இளைஞர்கள் வேலைக்காக முண்டியடித்துக் கொண்டதால் அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி உடைந்தது.

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் 40 பணியிடங்களுக்காக ஏராளமான இளைஞர்கள் குவிந்தது பேசு பொருளாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon