--- --:--:-- --

ஒரே பள்ளியை சேர்ந்த 10 அரசு பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் காமாலை..!

5

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியதால் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வரும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதால் சுகாதாரத் துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வும் மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் தடுக்கும் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon