--- --:--:-- --

மாற்று சமுதாய பெண்ணை காதலித்த இளைஞர்.. அடுத்து நடந்த சோகம்..!

5

அருப்புக்கோட்டை அருகே இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்டதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ஆனந்த்.

 

இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த பெண்ணின் உறவினர் பிரபாகர் என்பவர் அழகேந்திரனை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிகிறது.

 

அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இளைஞர் ஆனந்த் படுகொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon