இறந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தார்..!
மலேசியா டிராகன் மற்றும் லயன் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் நடுவராக பணியாற்றி வருபவர் ஜான் ஜங்ஷன். மலேசியாவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியாற்று வரும் பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவருக்கும் ஜூன் இரண்டாம் தேதி திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்த நிலையில் 24 அன்று காதலனும், காதலியும் காரில் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக கார் விபத்திற்கு உள்ளான நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த இரு வீட்டாரும் சமீபத்தில் காதலன் மற்றும் காதலி புகைப்படத்தை வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும் இறந்த பின்பு சொர்க்கத்தில் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என குடும்பத்தினர் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
பேய் திருமணம் என்று சொல்லப்படுகின்ற இந்த வழக்கம் மலேசியாவில் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





