சிகரெட் பிடித்தபடி ரீல்ஸ் செய்த பெண்.. மூச்சு திணறி கதறும் குழந்தை..!
புதுடெல்லியில் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு சிகரெட் புகைத்தபடி இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் பதிவிட்ட வீடியோ பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும் வினோத கலாச்சாரம் பெருகிவரும் நிலையில் பல ரீல்ஸ்க்காக உயிரையே பறிகொடுத்த சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் புதிய பொதுவெளியில் இளம்பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் பாட்டு படித்தபடியே சிகரெட் புகைக்கும் ரீல்ஸ் காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறிப்பாக அந்த குழந்தை சிகரெட் புகையிலை தாக்கத்தால் சற்று மூச்சு திணறி இருமும் வீடியோவில் அழகாக தெரிய வேண்டும் என்ற கோணத்தில் இளம் பெண் புகைத்தபடி காட்சி தருவது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களை சோதிக்க வைத்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





