குக்கி, மெய்தி சமூகத்தவருக்கு இடையே இணக்கம் ஏற்படுத்த பேச்சு..!
மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினருடனும் பேச இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்குப் பின் மணிப்பூரில் வன்முறைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
வீடுகளுக்கு தீவைப்பு உள்ளிட்டவை நடைபெற உள்ள நிலையில் நூற்றுக்கணக்கானோர் அண்டை மாநிலத்தில் புகுந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மணிப்பூர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின் பேசியவர் மணிப்பூரில் இயல்பு நிலை ஏற்படுத்துவது குறித்து மெய்தி, குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
வன்முருகையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்பு படைக்க மணிப்பூர் அனுப்பப்படுவார்கள் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





