--- --:--:-- --

பெண் தலைமை காவலரை ஓட ஓட கத்தியால் வெட்டிய கணவன்..!

7

காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் பெண் தலைமை காவலரை அவரது கணவரே ஓட விட விரட்டி கத்தியால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

காவல் நிலையத்தில் தலைமை காவலரான டில்லி ராணி கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மேகநாதனிடம் இருந்து பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில் இன்று காலை சாலையில் ஸ்கூட்டியில் பணிக்கு சென்ற டில்லி ராணியை வழிமறித்த மேகநாதன் அவரது வாகனத்தில் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த ஏடிஎம் மையத்தில் அவர் நுழைந்த பொழுதும் விடாமல் துரத்திச் சென்று டில்லி ராணியை இடது கை மற்றும் தோள்பட்டை பகுதியில் கத்தியால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

பொதுமக்கள் கூச்சலிட்டதும் அங்கிருந்த மேகநாதன் தப்பியோடியுள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிவகங்கை போலீசார் மேகநாதன் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon