கார் முழுவதும் மண்டை ஓடு..!
திருவண்ணாமலை தேரடி வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டதாக கூறி அகோரி என கூறிக்கொண்ட நபரின் காருக்கு போலீசார் 3,000 ரூபாய் அபராதம் விதித்தனர். நாகசாகி என ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்த அந்த காரின் டாஸ் போர்டில் மண்டை ஓடுகளும் வைக்கப்பட்டிருந்தன.
போலீசார் விசாரித்த பொழுது ரிஷிகேஷ் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் பார்க்கிங் இடம் கிடைக்காததால் சாலையிலே காரை நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்றதாகவும் கழுத்து நிறைய ருத்ராட்ச மாலைகளால் நிறைந்திருந்தவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





