ரயில்வே அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

முன்பதிவு ரயில் பட்டியலில் முன்பதிவு செய்யாதவர்கள் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்பதிவு செய்யப்பட்டவர்கள் பெட்டைகளில் கடந்த சில மாதங்களாகவே முன்பதிவு செய்யாதவர்கள் ஆக்கிரமிப்பதும் அதன் காரணமாக முன்பதிவு செய்த பயணிகள் சிரமங்களை சந்திப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

 

இந்நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் முன்பதிவு செய்யாதவர்கள் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் மண்டல அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலாளர் உடன் காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில் இந்த அறிவுறுத்தலை வழங்கி இருப்பதாகவும் ரயில்வே காவலர்களுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.