--- --:--:-- --

கோடை விடுமுறை.. வேகமாக பறந்த அதிரடி உத்தரவு..!

3

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்கும் பொழுது சத்துணவு மையங்களில் காலாவதியான உணவுப் பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அதில் பள்ளிகள் திறக்கும் பொழுது சத்துணவு மையங்களின் காலாவதியான உணவுப் பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எண்ணெய், முட்டை, கொண்டை கடலை, பாசிப்பயிறு போன்ற உணவு பொருட்கள், தரமானதாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon