--- --:--:-- --

150 அடி பள்ளம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து..!

2

ரியானாவின் குருஷேத்ராவில் இருந்து ஜம்மு மாநிலத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. 21 பேர் உயிரிழந்ததாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த விபத்து ஜம்மு மாவட்டத்தின் சவுராவில் உள்ள டாங்கிலி மோர் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon