விமானங்கள் புறப்படுவதில் தாமதம்.. அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்..!
மோசமான வானிலை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு வருகை தாமதமானதால் பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சின் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டினம் திட்டா, ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே மோசமான வானிலை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு வருகை தாமதம் அடைந்துள்ளது. இதனால் அவதிக்குள்ளான பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





