--- --:--:-- --

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு!

2

வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் மாத பூஜைக்காக நடை மலையாளம் மாதம் முதல் நாள் திறக்கப்பட்டு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

பங்குனி மாத ஆரட்டு விழாவும், சித்திரை மாத விசு கனி காணும் விழாவும் ஐயப்பன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை 15ஆம்தேதி முதல் 19ஆம் தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது.

 

வரும் 19ம் தேதி சபரிமலை கோயில் பிரதிஷ்டை தினமாகும். இதை முன்னிட்டு அன்றைய தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடைபெறும்.

 

19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். வைகாசி மாத பூஜைகளும், பிரதிஷ்டை தினமும் சேர்ந்து வருவதால் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon