வெளியானது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 2024 ஆம் கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
இந்த நிலையில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. அதில் 91.17% சதவிகிதம் மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி தேர்வு எழுதிய 8,11,172 மாணாக்கர்களில் 4,28,821 மாணவிகளும் 3,84,351 மாணவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இதில் 7,39,539 மாணாக்கர்கள் தேர்சி பெற்றுள்ளனர். அதன்படி, 4,04,143 – 94.69% மாணவியர்களும், 3,35,396 – 87.26% மாணவர்களும் தேர்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் மாணவர்களை விட 7.43% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.79% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.75% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.20% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.36% ஆக குறைந்துள்ளது.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்தலில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1964 ஆக உள்ள நிலையில், 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 241 ஆக உள்ளது.
மேலும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 96.2% தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல 95.56% தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு இரண்டாவது இடத்திலும், 95.23 தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




