--- --:--:-- --

பாஜக வேட்பாளரின் அதிர்ச்சி செயல்.. தொடர் சர்ச்சையில் சிக்கும் மாதவி லதா..!

4

வாக்காளர்களிடம் அடையாள அட்டையை சோதனை செய்த விவகாரத்தில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மாதவி லதா வாக்கு சாவடிக்கு சென்ற பொழுது அங்கிருந்த இஸ்லாமிய பெண்களிடம் ஆதார் அட்டையை கேட்டதுடன் புர்காவை அகற்ற கோரி சோதனை செய்துள்ளார்.

 

வாக்கு சாவடியில் நடந்த சம்பவத்தால் அதன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாஜக வேட்பாளர் மாதவி லதா மிது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக தேர்தல் பரப்புரையின் பொழுது மசூதி மீது அம்பு எய்வது போல் பாவனை செய்து மாதவி லதா சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon