--- --:--:-- --

காதல் கணவர் வேறொரு பெண்ணுடன் சென்றதால் இளம்பெண் தர்ணா..!

5

இளம்பெண் ஒருவர் தன்னை கணவரிடம் சேர்த்து வைக்க கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள வெள்ளகோவில் பட்டி பகுதியைச் சேர்ந்தவரும் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

 

இவர்களுக்கு நான்கு வயதில் ஜெகதீசன் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் மகேந்திரன் சமூக வலைதளம் மூலம் பழகி மார்ச் மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் முத்துமாரி புகார் அளித்தார்.

 

ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனிடையே கணவர் வீட்டில் வசித்து வந்த முத்துமாரி குழந்தையும், கணவர் மற்றும் மாமனார் மாமியார் வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது.

 

இதனால் முத்துமாரி தனது 4 வயது குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தன்னை கணவருடன் சேர்த்து வைக்கும்படி அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து முத்து மாரி தர்ணாவை கைவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon