சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த பாம்பு..!
ராமேஸ்வரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த படியில் பதுங்கியிருந்த பாம்பை பார்த்து வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
தகவல் அறிந்து வந்த ராமேஸ்வரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் பாம்பை போராடி பிடித்தனர். பிடிபட்ட நல்ல பாம்பு ஐந்து அடி நீளம் இருந்ததாகவும் அதனை உடனடியாக அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விட உள்ளதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





