--- --:--:-- --

முகநூலில் மலர்ந்த காதல்.. திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்..!

10

ராஜபாளையத்தில் முகநூலில் காதல் மலர்ந்த இளைஞர் திருமணத்திற்கு மறுத்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துகொலை செய்ய முயற்சித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

ராஜபாளையத்தை சேர்ந்த பெண்ணுக்கும் மதுரையை சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறிய நிலையில் திருமணம் செய்து கொள்ளும்படி அந்த இளைஞர் வலியுறுத்தியுள்ளார்.

 

அதற்கு மறுப்பு தெரிவித்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகரன் இளம் பெண் வீட்டிற்கு சென்று நேரில் பேசியுள்ளார். அப்பொழுது அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றார்.

 

இதில் வீட்டில் உள்ள பொருள்கள் எறிந்து நாசமான நிலையில், காயமடைந்த பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சியில் ஈடுபட்டு தப்பிய குணசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon