மது போதையில் உயிரிழந்த தொழிலாளி..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். கூலித் தொழிலாளியான அவர் மதுபோதையில் சிறு பாலத்தின் மீது உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென பாலத்தில் இருந்தவர் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





