--- --:--:-- --

தவறை தட்டி கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்..!

3

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி விடுகின்றனர். கார்த்திக் என்பவர் ரேஷன் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

 

ரேஷன் அரிசி கடத்துவதற்காக சிறுவனை கட்டாயப்படுத்தி தாக்கியுள்ளார். இதனை அந்த பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மாரிச்செல்வன் தட்டிக்கேட்டு உள்ளார். இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், மாரி செல்வத்தை மிரட்டியுள்ளார்.

 

பின்னர் 20க்கும் மேற்பட்டோர் மாரி செல்வத்தின் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் சேதமாகின. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் தடையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon