--- --:--:-- --

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து.. இளைஞர் உயிரிழப்பு..!

5

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் கோத்தகிரி வியூ பாயிண்டிற்கு சென்றுள்ளார்.

 

சிலருக்கும் பாண்டியன் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அங்கிருந்து சென்ற பாண்டியன் இருசக்கர வாகனத்தின் மீது ஏற்கனவே தகராறில் ஈடுபட்டவர்களின் கார் மோதியுள்ளது.

 

இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே பாண்டியன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகராறு காரணமாக இந்த நிகழ்வு நடந்ததா? அல்லது எதேச்சையாக நடந்ததா? என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon