270 முறை சாலை விதிகளை மீறிய பெண்..ஆப்பு வைத்த மாநகர போலீசார்..!
270 முறை வாகன விதிகளை மீறிய பெண்ணுக்கு போலீசார் ரூ.1.36 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவில் சாலை விதிகளை மீறும் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்ணுக்கு போக்குவரத்து போலீசார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, ட்ராபிக் சிக்னல்களை கடைபிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





