--- --:--:-- --

102 தொகுதிகள்.. 1625 வேட்பாளர்கள்.. நாளை வாக்குப்பதிவின் முக்கிய தகவல்கள்!

2

இந்தியாவில் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

 

இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதே போன்று, வடகிழக்கு மாநிலங்களில் தலா 2 தொகுதிகளை கொண்ட அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவிலும், தலா ஒரு தொகுதியை உடைய மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களிலும், லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிகோபார் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

மேலும், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அசாம், பிகார், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

அதாவது 25 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 12 இடங்களுக்கும்,80 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 8 இடங்களுக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.40 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பிகாரில் 4 இடங்களுக்கும், மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 6 தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ட்ராவில் 5 இடங்களுக்கும், 42 தொகுதிகளை உள்ளட்டக்கிய மேற்குவங்கத்தில் 3 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாமில் 14 மக்களவைத் தொகுதிகளில் ஐந்திலும், 2 இடங்கள் கொண்ட மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon