ஆசிட் ஊற்றி மரங்களை அழிக்க முயன்ற நபர்கள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் முன்பு இருந்த மரங்களை ஆசிட் ஊற்றி அழிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வீட்டின் உரிமையாளர் புகார் அளித்திருக்கிறார்.
கணபதி பாளையத்தில் வசித்து வரும் சதாசிவம் என்பவர் தனது வீட்டின் முன்பு 10 ஆண்டுகளாக 5 க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மரங்களுக்கு அடியில் குடிநீர் குழாய்கள் செல்வதால் அவற்றை வெட்டி அகற்ற வேண்டி நான்கு மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்ததையடுத்து மரங்களை வெட்டாமல் விட்டுச் சென்றனர். அதிகாலையில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மரங்களை சுற்றி ஆசிட் ஊற்றி சென்றுள்ளனர். இந்த கொடூர செயலின் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





