முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி காலமானார்..!
முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி காலமானார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அவர் பின்னர் கடந்த 26 இல் திமுகவில் இணைந்தார்.
74 வயதான அவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்சனையால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அடையாறில் உள்ள இல்லத்தில் இந்திரா குமாரினுடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதி சடங்கு இன்று பிற்பகல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரிசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இந்திரகுமாரி தீரா தமிழ் பற்றுடன் இலக்கிய வழியில் இயங்கியவர் என்றும் அவரது மறைவு கழகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





