புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கப்படும் : முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து தட்டான்சாவடி பகுதியில் அமைச்சர் ரங்கசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ரங்ககசாமி பாஜக தேர்தல் அறிக்கையில் ரேஷன் கடைகள் மூலமாக இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இலவச அரிசி விநியோகம் தொடங்கப்படும் என கூறினார். மேலும் மத்திய அரசு தரும் பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





