--- --:--:-- --

முதலையை அடித்து விட்டு உயிர் தப்பிய இளைஞர்..!

5

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை மாணப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் பழனிச்சாமியின் சகோதரி மகேஸ்வரி மற்றும் அவரது மகன் அஜய் ஆகியோர் பழனிச்சாமியின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

 

அங்குள்ள ஆற்றில் மகேஸ்வரி தன் மகனுடன் குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் இருந்த முதலை ஒன்று குளித்துக் கொண்டு இருந்த அஜய்யின் காலை கடித்து தண்ணீரில் இழுத்து சென்றுள்ளது. சுதாரித்துக்கொண்ட அஜய் முதலையின் முகத்தில் கையால் ஓங்கி குத்தியுள்ளார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலை காலை விட்டு விட்டு ஓடி விட்டது. ரத்த வெள்ளத்தில் ஆற்றுக்கு வெளியே வந்த அஜயை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon